ADDED : செப் 10, 2025 11:06 PM

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விழுப்புரத்தில், நகராட்சி 13, 24 வது வார்டு பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. விழுப்புரம், கே.ஆர்.மண்டபத்தில் நடந்த முகாமை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, முக்கிய துறை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது, சுகாதாரத்துறை, வேளாண்துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.
தாசில்தார் கனிமொழி, நகராட்சி ஆணையர் வசந்தி, தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட தொண்டரணி கபாலி, மாவட்ட விவசாய அணி கேசவன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், நகர்மன்ற கவுன்சிலர்கள் மணி, நவநீதம் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் குட்டி ரமேஷ், ரவிச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி கோபிநாத், மாவட்ட தொழிலாளரணி ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி புகழேந்தி, நிர்வாகிகள் முத்துவேல், அலெக்ஸ், மணி, விஜிசேட்டு, செல்வராஜ், தயாளன், காளிதாஸ், பாக்கியராஜ், ராஜசேகர், கதிர், ஜெயபிரகாஷ், ரஜினிகாந்த், செங்குட்டுவன், வசந்தராஜா, ஸ்டாலின், தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர் .