/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைதுவீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது
ADDED : ஜன 31, 2024 05:46 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மருதுார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையொட்டி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், மருதுார் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் 650 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மணி மனைவி சுசீலா,60; என்பவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இவரின் மகன் அன்பரசன்,21; என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.