/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
ADDED : செப் 22, 2025 02:42 AM

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அருகே சிமென்ட் ரோடு அமைக்க கோரி தெருவில் தேங்கிய மழை நீர் சேற்றில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் ஏரிக்கு செல்லும் வழியிலுள்ள சிமென்ட் ரோடு தெருவில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது.
இந்த பள்ளத்தை சீரமைக்க பல முறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மழை நீர் தெரு பகுதியில் குட்டை போல் தேங்கி நின்றது.
இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தேங்கிய மழைநீரில் கிராம மக்கள் நாற்று நட்டு சிமென்ட் சாலை அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.