/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொழுந்தனார் திட்டியதால் பெண் தற்கொலை கொழுந்தனார் திட்டியதால் பெண் தற்கொலை
கொழுந்தனார் திட்டியதால் பெண் தற்கொலை
கொழுந்தனார் திட்டியதால் பெண் தற்கொலை
கொழுந்தனார் திட்டியதால் பெண் தற்கொலை
ADDED : செப் 21, 2025 11:35 PM

திண்டிவனம்: கொழுந்தனார் திட்டியதால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அருகே மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாயி. இவரது மனைவி வேல்விழி, 46; இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த, 17ம் தேதி இரவு, ஜெய்சங்கரின் தம்பி சம்பத், 40; என்பவர் வேல்விழியை திட்டிவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மேலச்சேரியை சேர்ந்த வேல்விழி சகோதரர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.