ADDED : செப் 22, 2025 02:45 AM

வானுார்: விழுப்புரம் மாவட்டம் உப்புவேலுார் கிராமத்தில், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து, இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது.
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ், உப்புவேலுார் ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா செல்வக்குமார் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
பள்ளி ஆசிரியர் சங்கர்தாஸ் முன்னிலை வகித்தார். முகாமில் பிம்ஸ் டாக்டர்கள் ஹேம வர்ஷினி, மங்கையர் திலகம், இவாஞ்சலின் சப்திகா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பொதுநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு, அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவை தொடர்பாக சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை பிம்ஸ் முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு பணியாளர்கள் அய்யப்பன், ஏழுமலை, கோவிந்தம்மாள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகள் செய்தனர்.