ADDED : பிப் 23, 2024 11:49 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.
தமிழக அரசு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் அட்டை வழங்க கணினியில் விபரங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
நேற்று, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சி.இ.ஓ., அறிவழகன் ஆதார் அட்டை வழங்கும் பணி மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் சேகரிக்கும் இ.கே.ஒய்.சி., கல்வி உதவித்தொகை வழங்கும் தகவல்களை சரிபார்க்கும் பணியையும் ஆய்வு செய்தார்.
டி.இ.ஓ., கவுசர், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், மேலாண்மைக் குழு தலைவர் பிரியா பூபாலன், மாவட்ட திட்ட அலுவலர்கள் தனவேல், ஜெயச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் கவிதா, தலைமை ஆசிரியை கீதா, வள மைய மேற்பார்வையாளர் உமாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.