டிராக்டர் டிப்பர் பேட்டரி திருட்டு
டிராக்டர் டிப்பர் பேட்டரி திருட்டு
டிராக்டர் டிப்பர் பேட்டரி திருட்டு
ADDED : பிப் 11, 2024 10:14 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் டிராக்டர் டிப்பர் வாகனத்தில் இருந்த பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன்,39; இவர், நேற்று முன்தினம் தனது டிராக்டர் டிப்பர் வாகனத்தை விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள எடைமேடை ஒன்றில் நிறுத்தி வைத்திருந்தார்.
பின், வாகனத்தை அவர் எடுத்த போது, அதிலிருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.