ADDED : ஜன 05, 2024 12:20 AM
கண்டாச்சிபுரம் : முகையூர் அடுத்த சென்னகுணத்தில் மரக்கன்று நடும் விழா, புகையில்லா போகி மற்றும் 'போக்சோ' குறித்த விழிப்புணர்வு முப்பெரும் விழா நடந்தது.
அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சித் தலைவர் ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவானந்தம், மாகாலிங்கம் முன்னிலை வகித்தனர். முக்தா சீனுவாசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சித்தார்தன், ராதிகா ஆகியோர் மரக்கன்று நட்டனர். ஆசிரியர் கவிதா குமாரி போக்சோ சட்டம் குறித்து பேசினார். மாவட்ட சுற்றுசூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து சுற்றுச்சூழலியல் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியர் அருணகிரி நன்றி கூறினார்.