/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டேங்கர் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு டேங்கர் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
டேங்கர் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
டேங்கர் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
டேங்கர் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 21, 2025 11:04 PM

வானூர்: தைலாபுரம் அருகே பஞ்சராகி நின்ற டேங்கர் லாரி மீது, மற்றொரு டேங்கர் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக நேற்று முன்தினம் காலை டேங்கர் லாரி ஒன்று 'ஆசிட்' ஏற்றிக்கொண்டு சென்றது. தைலாபுரம் அடுத்த வி.கேணிப்பட்டு சந்திப்பில் சென்ற போது, திடீரென அந்த லாரி பஞ்சராகி சாலையோரம் நின்றது.
அப்போது, 'கேஸ்' ஏற்றிக்கொண்டு பின்புறமாக வந்த மற்றொரு டேங்கர் லாரி, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பஞ்சராகி நின்ற லாரி, சாலையோரத்தில் இறங்கியது. இதனால், புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.