/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கற்பக விருட்சமான பனை மரங்கள் கலெக்டர் அறிவுரை கற்பக விருட்சமான பனை மரங்கள் கலெக்டர் அறிவுரை
கற்பக விருட்சமான பனை மரங்கள் கலெக்டர் அறிவுரை
கற்பக விருட்சமான பனை மரங்கள் கலெக்டர் அறிவுரை
கற்பக விருட்சமான பனை மரங்கள் கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 21, 2025 11:03 PM
விழுப்புரம்: கற்பக விருட்சமாக பயன் தரும் பனை மரத்தினை அதிகளவில் வளர்க்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் செய்திக்குறிப்பு:
பனை மரத்தின் ஓலைகள் சுவடிகளாகவும், மேற்கூரை அமைக்கவும், ஜாடிகள், பாய்கள், கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
பனைமரத்தின் உண்ணக்கூடிய பொருட்களாக பனை வெல்லம், பனை சர்க்கரை, பதநீர், பனங்கிழங்கு மற்றும் நுங்கு ஆகியவவை பயன்படுத்தப்படுகிறது.
மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தரும் கற்பக விருட்சமாக பனை மரம் திகழ்கிறது. மிகக் குறைந்த பராமரிப்பும், அதிக நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்ட பனை, குறைந்த தண்ணீரையே வளர பயன்படுத்துகிறது.
பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவுகிறது. மேலும், மண் வளத்தை அதிகரிக்கவும், அரிப்பு ஏற்படக்கூடிய மண்ணை உறுதிப்படுத்தவும், நீர் சேமிப்பை அதிகரிக்கவும் அனைத்து வகை மண்ணிற்கும் உகந்த மரமாக பனை விளங்குகிறது.
ஒரு பனைமரம் 15 மீட்டர் உயரத்தை அடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் சராசரி ஆயுட்காலம் 150 ஆண்டுகள் ஆகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசு 3 ஆண்டுகளாக தொடர்ந்து பனை மேம்பாட்டு இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது. தோட்டக்கலைத்துறையின் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் 30 ஆயிரம் பனை விதைகளும், 250 பனை மரக்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, தனியார் மற்றும் பொது இடங்களில் நடுவதற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மக்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.
தமிழர்களின் வரலாற்றோடு பிணைந்து காணப்படும் பனை மரத்தை வெட்டுவதற்கும், மாவட்ட அளவிளான கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 பனை மர கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். பனைமரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.