/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மிக கண்காட்சி பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மிக கண்காட்சி
பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மிக கண்காட்சி
பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மிக கண்காட்சி
பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மிக கண்காட்சி
ADDED : செப் 21, 2025 11:03 PM

விழுப்புரம்:பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில் ஆன்மிக படவிளக்க கண்காட்சி நடந்தது.
வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு
தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் ஞான உபதேசம், தியான பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது.
இந்த இயக்கம் மூலம், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வளவனுார், குமாரகுப்பம் கிராமத்தில் உள்ள கலியவரதராஜ பெருமாள் கோவிலில் ஆன்மிக படவிளக்க கண்காட்சி நடந்தது.
இதில், சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, இயக்க நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.