ADDED : செப் 21, 2025 11:02 PM
திருவெண்ணெய்நல்லுார்: குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார், ஏமப்பூர் முத்தையா நகர் பகுதியில்
ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள கடை ஒன்றில் குட்கா பாக்கெட்டுகள் விற்பது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்த 205 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி விமலா, 55; என்பவரை கைது செய்தனர்.