/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு விழுப்புரத்தில் மவுன ஊர்வலம்தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு விழுப்புரத்தில் மவுன ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு விழுப்புரத்தில் மவுன ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு விழுப்புரத்தில் மவுன ஊர்வலம்
தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு விழுப்புரத்தில் மவுன ஊர்வலம்
ADDED : ஜன 08, 2024 05:18 AM

விழுப்புரம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அக்கட்சியினர் சார்பில் புகழ் அஞ்சலி மற்றும் மவுன ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் நேருஜி சாலை பழைய நகராட்சி அலுவலகம் முன் புகழ் அஞ்சலி ஊர்வலம் துவங்கியது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கேப்டன் மன்ற மாநில துணைச் செயலாளர் ராஜசந்திரசேகர், மாவட்ட தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, துணைச் செயலர்கள் வெங்கடேசன், சுந்தரேசன், சூடாமணி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
நகர செயலாளர்கள் காதர்பாஷா, ஜாபர்அலி, ஒன்றிய செயலர்கள் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேருஜி சாலை, திருச்சி சாலை வழியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் திடலை அடைந்தது.
இதனையடுத்து அங்கு புகழஞ்சலி கூட்டம் நடந்தது.