ADDED : பிப் 11, 2024 10:12 PM

செஞ்சி: செஞ்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
களையூர் - நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா தலைமை தாங்கினார். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் அக்பர்அலி வரவேற்றார்.
செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்து போலீசார், சாலை பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தினர் விழுப்புரம் சாலையில் துவங்கி காந்தி பஜார் வழியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.