Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

UPDATED : மே 31, 2025 07:52 AMADDED : மே 30, 2025 09:45 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில், பங்கேற்ற ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா ஒரு அரிய நாகரிக நாடு. நாடுகளின் நட்புறவில், சரியான இடத்தை மீட்டெடுக்கிறது.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதத்தின் சேவையை ஆதரிப்பவர்கள், கடும் விளைவை சந்திக்க வேண்டும். இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது. கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

எந்த நாடும், எவ்வளவு பெரியதாகவோ அல்லது சக்திவாய்ந்ததாகவோ இருந்தாலும், தனியாக நிர்வகிக்க முடியாது. ஒருவருக்கொருவர் சார்ந்து தான் வாழ வேண்டும். இதுதான் யதார்த்தம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us