/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பம்பை நதி நாகரீக எச்சங்கள் : தொல்லியல் துறையினர் ஆய்வு பம்பை நதி நாகரீக எச்சங்கள் : தொல்லியல் துறையினர் ஆய்வு
பம்பை நதி நாகரீக எச்சங்கள் : தொல்லியல் துறையினர் ஆய்வு
பம்பை நதி நாகரீக எச்சங்கள் : தொல்லியல் துறையினர் ஆய்வு
பம்பை நதி நாகரீக எச்சங்கள் : தொல்லியல் துறையினர் ஆய்வு
ADDED : மே 22, 2025 03:57 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பம்பை நதி நாகரீகம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவ., மாதம் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, விக்கிரவாண்டி அருகே சுப்பம்பேட்டை தென்னமாதேவி பகுதிகளில் பம்பை நதி கரையோரம் பண்டைய காலத்து எச்சங்கள் கரை ஒதுங்கின.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரான கல்லுாரி பேராசிரியர் ரமேஷ், பம்பை நதி நாகரிகம் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், பம்பை நதி நாகரிகம் குறித்து அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர், விக்கிரவாண்டி அய்யங்கோவில்பட்டு, தென்னமாதேவி பகுதிகளில் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
இதுகுறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் பம்பை நதி நாகரீகம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் பேரில் தொல்லியல் துறையினர் இப்பகுதியில் சங்ககால பொருட்களை கண்டெடுத்துள்ளனர். பம்பை நதி நாகரிகம் குறித்து முதற்கட்ட ஆய்வு துவங்கியுள்ளது.
இதற்கான ஆராய்ச்சி எவ்வளவு துாரம் செல்லும் என்பதை தொல்லியல் துறையினர் முடிவு செய்த பிறகு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இன்னும் மூன்று மாத காலங்களில் இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என கூறினார்.
ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் செல்வமூர்த்தி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் சுபலட்சுமி, விக்டர் ஞானராஜ், கல்லுாரி பேராசிரியர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ., வினோத்குமார், சர்வேயர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.