/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம்
ADDED : மே 22, 2025 11:34 PM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் அனைத்துத்துறை வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், மாவட்டத்தில் அனைத்துத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் சாலையோர தரைக்கிணறுகளை கண்டறிந்து உடனடியாக சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளையும், கிணற்றின் மேற்பகுதியினை கம்பிவலைகள் கொண்டு மூடுவதற்கும், பயன்பாடின்றி இருக்கும் கிணறுகளை மூட வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால் அதன் இனப்பெருக்கத்தை தடுப்பதற்கான பணிகளையும், பொதுஇடங்களில் சங்கம் மற்றும் கட்சி சார்ந்த கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் ரூபவ், ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.