ADDED : மே 21, 2025 11:17 PM

விழுப்புரம்: மத்திய அரசை கண்டித்து தட்சண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பலராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, மோகன்துரை கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பெரியண்ணன் நன்றி கூறினார்.