/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்பு திட்டம்; வேளாண்மை துறை தகவல் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்பு திட்டம்; வேளாண்மை துறை தகவல்
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்பு திட்டம்; வேளாண்மை துறை தகவல்
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்பு திட்டம்; வேளாண்மை துறை தகவல்
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்பு திட்டம்; வேளாண்மை துறை தகவல்
ADDED : மே 21, 2025 11:18 PM
வானுார்: வானுார் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தினை வேளாண்மை துறை செயல்படுத்த உள்ளது.
இது குறித்து வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
வானுார் வட்டாரத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களிலும், கடந்த இரு தினங்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.800 பின்னேர்ப்பு மானியம் வழங்கப்பட உள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அளவில் மானியம் வழங்கப்பட உள்ளது. கோடை உழவு செய்வதால், மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து மண்ணில் நீர் புகும் தன்மை அதிகரிக்கிறது. பூச்சிகளின் முட்டை மற்றும் கூட்டுப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகிறது.
சாகுபடி செய்யும் பயிர்களில் களைக்கட்டுப்பாடு குறைந்த அளவில் காணப்படுகிறது. எனவே வானுார் வட்டார விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களிடம் உள்ள மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி வாயிலாக தங்களது விவரத்தை பதிவேற்றம் செய்யலாம்.
இல்லையென்றால், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.