Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

ADDED : மே 21, 2025 11:17 PM


Google News
விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த மேல்பாதி, பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் சுமன்ராஜ், 18; இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவராஜ் என்பவரின் திருமணத்திற்கு டிஜிட்டல் பேனர் வைத்தார். பேனரில் தங்கள் போட்டோவை ஏன் போடவில்லை என அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சிரஞ்சீவி, 18; தினேஷ், ஹரீஷ், சஞ்சய் உள்ளிட்டோர் சுமன்ராஜை கேட்டு திட்டி தாக்கினர்.

தகராறை தடுக்க வந்த சுமன்ராஜ் சகோதரி சுமித்ரா, 20; என்பவரையும் தாக்கினர். இதை தொடர்ந்து சிரஞ்சீவியை, சுமன்ராஜ், நவீன், சசிகலா, இளையபெருமாள் தரப்பு திட்டி தாக்கியது.

வளவனுார் போலீசார் இருதரப்பை சேர்ந்த சிரஞ்சீவி, சுமன்ராஜ் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us