ADDED : மே 21, 2025 11:16 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாயமான நர்சிங் மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டு ரமேஷ் மகள் வைஷாலி, 22; சென்னை வடபழனி தனியார் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் 3ம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 5ம் தேதி ஒட்டன்காடுவெட்டியில் உள்ள பாட்டி வீட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டவர், அங்கு சென்றுசேரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.