/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாப்பனப்பட்டு உபரிநீர் வாய்கால் அகலப்படுத்த அளவீடு பணி பாப்பனப்பட்டு உபரிநீர் வாய்கால் அகலப்படுத்த அளவீடு பணி
பாப்பனப்பட்டு உபரிநீர் வாய்கால் அகலப்படுத்த அளவீடு பணி
பாப்பனப்பட்டு உபரிநீர் வாய்கால் அகலப்படுத்த அளவீடு பணி
பாப்பனப்பட்டு உபரிநீர் வாய்கால் அகலப்படுத்த அளவீடு பணி
ADDED : மே 21, 2025 11:16 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் உபரி நீர் வாய்க்கால் அகலப்படுத்த நகாய் டி.ஆர்.ஓ., நில அளவீடு பணி செய்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே திருச்சி - சென்னை சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடக்க உள்ளது. இதற்காக சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் போது, உபரி நீர் வாய்க்கால் முகப்பு பகுதியில் தடுப்பு சுவர் அமைத்ததால் உபரி நீர் வெளியேற முடியாமல் வாய்க்கால் குறுகியது.
இதனால் உபரி நீர் வெளியே முடியாமல் வயல்வெளிகளில் தேங்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து கடந்த மாதம் 19ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. வாய்க்காலை அகலப்படுத்த விவசாயிகள் சார்பிலும் நகாய் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நகாய் நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., குமரவேல், பாப்பனப்பட்டில் உபரி வாய்க்கால் அகலப்படுத்த அளவீடும் பணிகள் நடந்தது.
நகாய் நிலம் எடுப்பு பிரிவு தாசில்தார் ஜெயலட்சுமி, சர்வேயர்கள் வசந்தா, வி.ஏ,ஓ., முருகன், ஊராட்சி தலைவர் ராஜாங்கம் ,மனுதாரர் திருமுருகன், முன்னாள் தலைவர்கள் ஞானதேசிகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.