/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 10:33 PM

திண்டிவனம்; மயிலம் அருகே தனியார் கெமிக்கல் கம்பெனியில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து பலர் இறந்தனர்.
அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் எத்தனால், மெத்தனால் பயன்பாடு குறித்து தொழிற் சாலைகள், கடைகள் உள்ளிட்டவைகளில் அவ்வப்போது, ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க ஏ.டி.ஜி.பி., அமல்ராஜ், ஐ.ஜி., கபில் சகார்கர் உத்தரவின் பேரில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம்,புதுச்சேரி - மயிலம் ரோடு, பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனிகளில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி, மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், மத்திய நுண்ணறி பிரிவு உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா, திண்டிவனம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பட்டாபிராமன், தனிப்பிரிவு தலைமை காவலர் முருகன் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், மெத்தனால், எத்தனால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.