ADDED : ஜூன் 12, 2025 10:34 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, த.வெ.க., நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கீழ்புறத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இந்த கடைக்கு மதுபானம் வாங்கச் செல்வோர் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், குடிமகன்கள் மது போதையில் அங்கேயே விழுந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறை விளைவிக்கும் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், வழக்கறிஞர் தமிழரசன், நகர செயலாளர் (மேற்கு) முபாரக், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மாணவரணி விஜய், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், வார்டு செயலாளர் குமார், நிர்வாகிகள் குரு, விக்கி, கோகுல் உடனிருந்தனர்.