/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கழிவுநீர் குளமாக மாறிய குடியிருப்பு; விழுப்புரத்தில் பொதுமக்கள் அவதி கழிவுநீர் குளமாக மாறிய குடியிருப்பு; விழுப்புரத்தில் பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய குடியிருப்பு; விழுப்புரத்தில் பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய குடியிருப்பு; விழுப்புரத்தில் பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய குடியிருப்பு; விழுப்புரத்தில் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 10:33 PM

விழுப்புரம்,; விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே குருசாமி பிள்ளை தெரு, வ.உ.சி., வீதி மற்றும் போலீஸ் குடியிருப்புகள் உள்ளது.
குருசாமி பிள்ளை தெருவில் நகராட்சி மைதானம் வழியாக வெளியேறும் கழிவுநீர் கோலியனுார் கால்வாய்க்கு செல்லாமல் குடியிருப்புகள் நிறைந்த சாலையில் குளமாக தேங்கியுள்ளது.
கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டு பல மாதங்களாக துார்ந்துள்ளது.
இதனால், கழிவுநீர் குருசாமி பிள்ளை சாலையில் குளம் போல் தேங்கி அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோலியனுார் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, கழிவுநீர் தடையின்றி செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.