நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : செப் 14, 2025 11:21 PM
விக்கிரவாண்டி:வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கெடார் அடுத்த கக்கனுார், கக்கன் தெருவைச் சேர்ந்தவர் லுார்து பிரான்சிஸ், 32; கூலித் தொழிலாளி. இவர் கடந்த,10 ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு குடும்பத்துடன் வேலைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 7 கிராம் நகை மற்றும் 3000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.