ADDED : செப் 14, 2025 11:21 PM
விழுப்புரம்,:இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகள் சுவேதா, 22; சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் விழுப்புரம் வீட்டிற்கு வந்த சுவேதாவை கடந்த 12ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.