திருவெண்ணெய்நல்லுார்:வயிற்று வலியால் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி ராஜகுமாரி, 26; பல்லரிபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜகுமாரி சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.