ADDED : பிப் 06, 2024 04:32 AM
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் படி பூஜை விழா நடந்தது.
அவலுார்பேட்டையில் படி பூனஜ விழாவை முன்னிட்டு ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, கலைக்குழு, பஜனைக் குழுவினர் ஊர்வலமாக சித்தகிரி முருகன் கோவிலுக்குச் சென்றனர். மலை மீதுள்ள கோவிலின் அனைத்து படிகளுக்கும் சிறப்பு பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், வி.ஏ.ஓ., காளிதாஸ், விழா ஏற்பாட்டாளர் அண்ணாமலை, செல்வராஜ், ஆலோசகர் ஏழுமலை, ஆசிரியர் சிதம்பரநாதன், ஜெகதீஷ்குமார், கிராம மக்கள் பங்கேற்றனர்.