ADDED : ஜன 05, 2024 10:21 PM

விழுப்புரம், : விழுப்புரத்தில், மண்டல ம.தி.மு.க., நிர்வாகிகள் தேர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பொருளாளர் செந்திலதிபன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் விழுப்புரம் பாபு கோவிந்தராசு, கள்ளக்குறிச்சி ஜெய்சங்கர், கடலுார் கிழக்கு ராமலிங்கம், தெற்கு குணசேகரன், மேற்கு பிச்சை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 3 மாவட்டங்களில், ஏதாவது ஒரு தொகுதியில் ம.தி.மு.க., போட்டியிட வாய்ப்பு பெற வேண்டுமென நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
பின்னர், மாவட்ட அளவிலான இளைஞரணி, மாணவரணி, பொறியாளர் அணி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆசைத் தம்பி, மாணவரணி அமைப்பாளர் பால சசிகுமார் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
மாநிலத் துணை அமைப்பாளர்கள் பெரியார், சிவராமன், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் நரசிம்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நகர செயலாளர் சம்பந்தம் நன்றி கூறினார்.