/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணிதொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 31, 2024 02:32 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், தொழுநோய் விழிப்புணர்வு தினத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஜன.30ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஜன.30 முதல் பிப்.14 வரை இரண்டு வாரங்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் புதிய நோயாளிகளை கண்டறியும் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதனையொட்டி மாணவர்கள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாணவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிறகு, மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் லட்சுமணன், துணை இயக்குநர்கள் மணிமேகலை, சுதாகர், அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.