கேரளா மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார் : முதல்வர் ஸ்டாலின்
கேரளா மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார் : முதல்வர் ஸ்டாலின்
கேரளா மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார் : முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஆக 02, 2024 10:03 PM

சென்னை :கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவ தமிழ்நாடு தயாராக உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
கேரளா சென்றுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முழு முனைப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் உள்ள நமது அதிகாரிகளின் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். அது மட்டுமல்லாது தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன் . இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.