/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கடந்தாண்டு விளைபொருட்கள் கொள்முதல் ரூ.90 கோடி! விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் சாதனைகடந்தாண்டு விளைபொருட்கள் கொள்முதல் ரூ.90 கோடி! விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் சாதனை
கடந்தாண்டு விளைபொருட்கள் கொள்முதல் ரூ.90 கோடி! விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் சாதனை
கடந்தாண்டு விளைபொருட்கள் கொள்முதல் ரூ.90 கோடி! விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் சாதனை
கடந்தாண்டு விளைபொருட்கள் கொள்முதல் ரூ.90 கோடி! விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் சாதனை
ADDED : ஜன 13, 2024 03:37 AM
விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில், கடந்தாண்டு 90 கோடி ரூபாய் மதிப்பிலான விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 47 ஆயிரம் விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்து பயனடைந்தனர்.
விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்கு, கோலியனுார், வளவனுார், காணை, மாம்பழப்பட்டு, கஞ்சனுார், பிடாகம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி துவங்கி டிசம்பர் மாதம் வரை 47 ஆயிரத்து 465 விவசாயிகள் விளைபொருட்களைக் கொண்டு வந்தனர்.
இதில், 16 ஆயிரத்து 250 விவசாயிகள் 3,365 டன் பருத்தி, 9,275 விவசாயிகள் 2,458 டன் உளுந்து, 6,854 விவசாயிகள் 2,151 டன் பனிப் பயிர்கள், 4,810 விவசாயிகள் 7,755 டன் நெல், 4,610 விவசாயிகள் 730 டன் எள், 2,266 விவசாயிகள் 756 டன் கம்பு, 1,061 விவசாயிகள் 248 டன் வேர்க்கடலை ஆகிய விளை பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
இதேபோன்று, 786 விவசாயிகள் 41 டன் பச்சைப்பயறு, 434 விவசாயிகள் 528 டன் மக்காசோளம், 373 விவசாயிகள் 86 டன் கேழ்வரகு, 366 விவசாயிகள் 77 டன் திணை, 245 விவசாயிகள் 8 டன் தட்டைப்பயிர், 4 விவசாயிகள் 1,927 கிலோ சூரியகாந்தி, ஒரு விவசாயி 119 கிலோ வரகு, 130 விவசாயிகள் இதர விளைபொருட்களையும் விற்பனை செய்துள்ளனர்.
கடந்தாண்டு மட்டும் 22.29 கோடி ரூபாய் மதிப்பில் பருத்தி, 17.64 கோடி ரூபாய் மதிப்பிலான உளுந்து, 14.40 கோடி ரூபாய் மதிப்பில் நெல், 9.33 கோடி ரூபாய் மதிப்பில் எள், 3.74 கோடி ரூபாய் மதிப்பில் கம்பு.
1.85 கோடி ரூபாய் மதிப்பில் வேர்க்கடலை, 36 லட்சம் ரூபாய் மதிப்பில் திணை, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பச்சைப்பயறு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கேழ்வரகு, 4 லட்சம் ரூபாய் மதிப்பில் தட்டைப்பயிர், 4.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மார்க்கெட் கமிட்டியில், கடந்த 2023ம் ஆண்டு 47 ஆயிரத்து 465 விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 90 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 47 ஆயிரம் விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.
-நமது நிருபர்-