Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: டிரம்புடன் பேசிய பிறகு ரஷ்ய அதிபர் புடின் மனமாற்றம்

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: டிரம்புடன் பேசிய பிறகு ரஷ்ய அதிபர் புடின் மனமாற்றம்

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: டிரம்புடன் பேசிய பிறகு ரஷ்ய அதிபர் புடின் மனமாற்றம்

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: டிரம்புடன் பேசிய பிறகு ரஷ்ய அதிபர் புடின் மனமாற்றம்

Latest Tamil News
மாஸ்கோ: ''உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ரஷ்யா தயாராக உள்ளது'' என அமெரிக்க அதிபர் டிரம்புடன் இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தினார். பின்னர், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: மூன்று ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருக்கிறது. அமெரிக்க அதிபர் உடன் நாங்கள் உடன்பட்டுள்ளோம். அமைதி தீர்வுக்கு ஆதரவாக உள்ளேன்.



இரு தரப்புக்கும் ஏற்புடைய சமரசங்களை கொண்டுவர வேண்டும். இது குறித்த டிரம்புடனான பேச்சு நேர்மையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. எடுத்துக்காட்டாக, தீர்வுக்கான கொள்கைகள், சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் நேரம் போன்ற பல நிலைப்பாடுகளை வரையறுத்துள்ளோம். அமைதியை நோக்கிச் செல்வதற்கான மிகவும் பயனுள்ள வழிகளை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

டிரம்ப் சொல்வது இதுதான்!


இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

* ரஷ்ய அதிபர் புடின் நல்ல மனிதர். அவருடன் சிறிது நேரம் தொலைபேசியில் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த ஆலோசனையை நடத்தினோம்.

* முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன்.சராசரியாக ஒவ்வொரு வாரமும் 5,000 இளம் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். நாங்கள் அதைத் தடுக்க முயற்சிக்கிறோம்.

* மிகவும் மோசமான, மிகவும் கொடூரமான செயற்கைக்கோள் படங்களை நான் பார்த்திருக்கிறேன். போர் நிறுத்தத்தை கொண்டு வர, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.

இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

நான் தயார்; அவர்கள் தயாரா?

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். ஆனால் ரஷ்யா தயாராக இருக்கிறதா என்று தெரியவில்லை. ரஷ்ய தரப்பின் கொள்கைகள் எனக்குத் தெரியாது. அமெரிக்க அதிபர் டிரம்புடனான எங்கள் உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டேன். அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்.

எல்லோரும் போர் நிறுத்தத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை நான் உண்மையிலேயே நம்புகிறேன். மிக அதிகமான இழப்புகள்; நாங்கள் உண்மையில் இந்த போரை முடிக்க விரும்புகிறோம். ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் விரும்புவது இதுதான்.

போரை நிறுத்த அவர்கள் உண்மையிலேயே தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்ட, முதலில் இடைக்கால போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us