/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வுசிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
ADDED : ஜன 08, 2024 05:09 AM

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்கள் கால ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடி மரத்தின் எதிரே இருந்த சுற்று சுவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது.
அத்துடன் மலை கோவிலின் மேலே வாகனங்கள் செல்வதற்காக துவக்கிய சாலை பணியும் 2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுற்றுச் சுவர் இல்லாமல் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டாக வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களை மலை மீது அனுமதிக்காமல் தடை செய்திருந்தனர். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சிங்கவரம் ரங்கநாதர் கோவிலிலும் ஆய்வு நடத்தினார்.
சுற்றுசுவர் இடிந்த பகுதி, தடைபட்ட சாலைகளை பார்வையிட்டார். ஆய்வின் போது இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சிவலிங்கம், சிவாகரன், ஜீவானந்தம், மேலாளர் மணி, அலுவலர் இளங்கீர்த்தி உடனிருந்தனர்.