ADDED : மார் 28, 2025 05:08 AM
செஞ்சி : செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் மன்ற துவக்க விழா மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பேராசிரியை ஸ்ரீவித்யா தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கந்தவேல் வரவேற்றார். திருவண்ணாமலை எஸ்.கே.பி., பொறியியல் கல்லுாரி நிர்வாகவியல் துறை தலைவர் பிரதீப் பழனி சிறப்புரையாற்றினார்.
வணிகவியல் துறை பேராசிரியர்கள் பிருந்தா, நந்தினி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகள், தொழில் பாதைகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்தும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மயிலம்
மயிலம் கல்லுாரியில் நடந்த கருத்தரங்த்திற்கு, பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வணிகவியல் துறை உதவி பேராசிரியர் அந்தோணி ராஜ், ஆன்லைன் வர்த்தகம், நுகர்வோர் பாதுகாப்பு, ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள தீமைகள் குறித்து பேசினார்.
கல்லுாரி துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.