ADDED : மார் 28, 2025 05:08 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை 29ம் தேதி உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல். சுத்தமான குழநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.
கலைஞரின் கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டபணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை திட்டப் பணி விவரங்கள் கிராம சபையில் வைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும், கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.