/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கில் இறுதியாக வாதிட வாய்ப்பு விழுப்புரம் கோர்ட்டில் வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கில் இறுதியாக வாதிட வாய்ப்பு விழுப்புரம் கோர்ட்டில் வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கில் இறுதியாக வாதிட வாய்ப்பு விழுப்புரம் கோர்ட்டில் வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கில் இறுதியாக வாதிட வாய்ப்பு விழுப்புரம் கோர்ட்டில் வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கில் இறுதியாக வாதிட வாய்ப்பு விழுப்புரம் கோர்ட்டில் வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜன 13, 2024 07:30 AM

விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் மேல்முறையீடு வழக்கில், இறுதி கட்டமாக வாதிட அவகாசம் அளித்து, வரும் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் பாதுகாப்புக்கு காரில் சென்ற பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தது.
புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்ததாக முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பும், முன்னாள் எஸ்.பி., தரப்பும் வாதிட்டு முடித்தனர்.
ஆனால், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் தரப்பு வாதங்களை முன் வைக்காமல், தொடர்ந்து கால அவகாசம் கேட்டதால், அதிருப்தியடைந்த நீதிபதி பூர்ணிமா, ஜனவரி 12ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளதால், வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டி ஐகோர்ட்டில் ராஜேஸ்தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியாது.
அவரது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க, விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை இல்லை எனவும், ஜனவரி 24க்குள் விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை சமர்பித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி பூர்ணிமா, ராஜேஷ்தாஸ் தரப்பு, மேல்முறையீடு குறித்த தங்கள் வாதத்தை முன்வைக்க, இறுதி அவகாசம் அளித்து, வரும் 18ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.