/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் தங்கம் ஜூவல்லரி புதிய கடை திறப்பு விழாவிழுப்புரத்தில் தங்கம் ஜூவல்லரி புதிய கடை திறப்பு விழா
விழுப்புரத்தில் தங்கம் ஜூவல்லரி புதிய கடை திறப்பு விழா
விழுப்புரத்தில் தங்கம் ஜூவல்லரி புதிய கடை திறப்பு விழா
விழுப்புரத்தில் தங்கம் ஜூவல்லரி புதிய கடை திறப்பு விழா
ADDED : பிப் 11, 2024 10:18 PM

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே 45 ஆண்டுகால பாரம்பரியமிக்க தங்கம் பைனான்ஸ், தங்கம் நகை அடகு கடை நிறுவனத்தின் புதிய தங்கம் ஜூவல்லரி கடை திறப்பு விழா நடந்தது.
பூந்தோட்டம் டி.பி.எஸ்., பைனான்ஸ் உரிமையாளர் தங்க சண்முகம் தலைமை தாங்கினார். ஐயப்பன் கோவில் குருசாமி குப்புசாமி, தங்கம் பாரத் கேஸ் டீலர் மற்றும் தங்கம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் தங்கம் சந்தோஷ் (ரிசர்வ் வங்கி கண்ட்ரோல்), விழுப்புரம் அரசு ஒப்பந்ததாரர் ரகுராமன், டாக்டர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.
லதா சண்முகம், மலர்விழி தங்கசேகர், விஜயா தங்கசண்முகம், டாக்டர் கவுசல்யா தங்கம் சந்தோஷ், அமுதா ரகுராமன், அர்ச்சனா தங்கம், விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் மற்றும் தங்கம் குரூப்ஸ் நிறுவனர் தங்கசேகர் தங்கம் ஜுவல்லரியை திறந்து வைத்தார்.
தங்கம் பைனான்ஸ் கணக்காளர் ராஜேந்திரன், லட்சுமணன், தீக்ஷனாதங்கம், சர்வயோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை புரிந்தோரை தங்கம் அடகு கடை, தங்கம் பைனான்ஸ், தங்கம் ஜுவல்லரி உரிமையாளர் தங்கபாண்டியன் வரவேற்றார்.