/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 15, 2025 02:31 AM

செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 99 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி துணை சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஒம்பந்ததாரர்கள் கோட்டீஸ்வரன், ரசூல் பாஷா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.