/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார் விஜய் தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்டி சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார் விஜய் தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்டி
சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார் விஜய் தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்டி
சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார் விஜய் தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்டி
சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார் விஜய் தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்டி
ADDED : செப் 15, 2025 02:30 AM

விழுப்புரம்:'விஜய் சனிக்கிழமை நாடகம் நடத்துகிறார்' என விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதம சிகாமணி கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
ஓரணியில் தமிழகம் உறுப்பினர் சேர்க்கை, தெற்கு மாவட்டத்தில் திருக்கோவிலுார் தொகுதியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 305, விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம்.
இன்று 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தின் மண், மொழி, உரிமையை காத்திடுவோம் என திருக்கோவிலுார் தொகுதியில் 286 பூத்களிலும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 பூத்களிலும் உறுதிமொழி எடுக்கின்றோம்.
வரும் 17ம் தேதி கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் தெற்கு மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்க உள்ளோம். வரும் 20ம் தேதி ஓரணியில் தமிழகம் உறுப்பினர் சேர்க்கையை கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டம் நடக்கிறது.
தேர்தலில் அளித்த வாக்குறுதியும், அளிக்காத வாக்குறுதியும் செயல்படுத்திய ஒரே முதல்வர் ஸ்டாலின். அரசியலுக்காக சிலர் ஏதே பேசுகின்றனர். அவர்களே தலைவர் என நினைத்து கொண்டுள்ளனர்.
அவர்களை மக்கள் தலைவராக ஏற்க மாட்டார்கள். கூட்டம் சேர்ந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது.
அது கொள்கையில்லாத கூட்டம். விஜய் சனிக்கிழமை நாடகம் நடத்தி வருகிறார்.
இவ்வாறு கவுதம சிகாமணி கூறினார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் கராஜா, ஜெயபால், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.