/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அக் ஷர்தம் சென்ட்ரல் பள்ளி விளையாட்டு சங்கமம் விழா அக் ஷர்தம் சென்ட்ரல் பள்ளி விளையாட்டு சங்கமம் விழா
அக் ஷர்தம் சென்ட்ரல் பள்ளி விளையாட்டு சங்கமம் விழா
அக் ஷர்தம் சென்ட்ரல் பள்ளி விளையாட்டு சங்கமம் விழா
அக் ஷர்தம் சென்ட்ரல் பள்ளி விளையாட்டு சங்கமம் விழா
ADDED : செப் 15, 2025 02:31 AM

விழுப்புரம்:விழுப்புரம் பானாம்பட்டு பாதை அக் ஷர்தம் சென்ட்ரல் சி.பி.எஸ்.சி.இ., பள்ளியில் விளையாட்டு சங்கமம் விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மகாலட்சுமி லட்சுமணன், முதல்வர் பிரவணன், துவக்கப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் மேரி சார்லட் மற்றும் விக்னேஷ் ஹரிதேவா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் எஸ்.பி., சரவணன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மாஸ் உடற்கல்வி கல்லுாரி முதல்வர் ஜான்சன் பிரேம்குமார், மாணவர்களுக்கு விளையாட்டு அவசியம் குறித்து பேசினார்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அசோகன் விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தார்.
விழாவில், மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.