/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2025 08:50 PM
விக்கிரவாண்டி: ஏழுசெம்பொன் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தில் கோவிந்தசாமி நகர் குளத்திலிருந்து செல்லும் நீர் ஓடைகள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள பட்டா நிலங்களிலும், கிணறுகளும் பாதிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் விவசாய விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் பலனில்லை. விவசாயிகள் நலன் கருதி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் ஓடைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.