/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
ADDED : ஜூன் 30, 2025 03:07 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பயணிகள் ரயிலில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் பிரதமரின் துாய்மையான இந்தியா என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி நேற்று நடந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
விழுப்புரத்தை சேர்ந்த 5 பள்ளிகளில் படிக்கும் 400 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். 4ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வர்ணம் தீட்டுதலும், 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, துாய்மையான இந்தியா என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டும் போட்டி நடந்தது. போட்டி முடிவுகள் வரும் ஜூலை 10ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை, புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் துணை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ஓவியர் சிவக்குமார் மற்றும் ஜான்சன், ஜெயஹரி செய்திருந்தனர்.