Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனத்தில் தொடர் பைக் திருட்டு மூவர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

திண்டிவனத்தில் தொடர் பைக் திருட்டு மூவர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

திண்டிவனத்தில் தொடர் பைக் திருட்டு மூவர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

திண்டிவனத்தில் தொடர் பைக் திருட்டு மூவர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

ADDED : ஜூன் 30, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனத்தில், ஒரே இரவில் மூன்று பைக் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரிடம் இருந்து, 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை, தென்னைமரச்சாலையை சேர்ந்தவர் சீத்தராமன், 70; கடந்த 17 ம் தேதி, இவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர், பைக் திருடப்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசன் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கும் திருடப்பட்டது.

அப்பகுதி சி.சி.டி.வி., காட்சியை ஆய்வு செய்தபோது, முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பைக் திருடி செல்வது தெரியவந்தது. பைக் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடினர்.

விசாரணையில், பைக் திருடிய மர்ம நபர்கள் மதுரையில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பகுதியில் தங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பைக் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, லிங்கவடி, வடக்கு தெருவை சேர்ந்த தவமணி மகன் வினோத்குமார், 24; மதுரை, யானை ஒத்தக்கடை, திருமோகூர்ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணக்குமார் மகன் செல்வஸ்ரீவட்சன், 25; சிவகங்கை, பனங்காடி ரோடு, லிங்கதுரை மகன் எலி (எ) பிரசாந்த், 29; ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, திண்டிவனம் அழைத்து வந்தனர்.

திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் திருடிய 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலுார், கடலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20க்கு மேற்பட்ட பைக்கு திருட்டு, வீட்டை உடைத்து திருடும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூகுள் மேப் மூலம் திட்டம்

பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும், சென்னைக்கு செல்வதற்காக பஸ்சில் சென்றபோது, நள்ளிரவு திண்டிவனம் பஸ் நிலையத்தில் இறங்கினர். கூகுள் மேப் மூலம் ஆய்வு செய்து, திண்டிவனம், சஞ்சீவிரயான்பேட்டை பகுதியில் அதிக வீடுகள் உள்ளதை பார்த்து, ஆட்டோ மூலம் அங்கு சென்றனர். வீட்டை உடைத்து திருடும் நோக்கத்தில் சென்றவர்கள், திடீரென்று அங்கு புதியதாக நிறுத்தியிருந்த மூன்று பைக்குகளை உடைத்து திருடினர். திருடிய பைக்குகளுடன் சென்னைக்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us