Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தில் தர்ணா

புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தில் தர்ணா

புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தில் தர்ணா

புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தில் தர்ணா

ADDED : ஜன 10, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் கிடங்கல் பூதேரி நடுத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன், 57; இவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் நிலத்தை கடந்த 2019ம் ஆண்டிலிருந்து குத்தகைக்கு பயிர் செய்து வந்துள்ளார்.

குத்தகை செய்வதற்காக அறிவழகன் பணம் கொடுத்துள்ளார். கிருஷ்ணனின் மருமகன் அசோக்குமார் நிலத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்துள்ளார்.

அசோக்குமார் இறந்த பிறகு, நிலம் சிவசங்கர் என்பவருக்கு கைமாறிவிட்டது.

இந்நிலையில் குத்தகைக்கு எடுத்து போது கொடுத்த பணத்தை திருப்பி தருவதில், அறிவழகன் தரப்பினருக்கும், சிவசங்கர் தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சிவசங்கர் ஆதரவாளர்கள் சிலர், அறிவழகன் பராமரிப்பிலுள்ள நிலத்தை காலி செய்ய சொல்லி தகராறு செய்துள்ளனர். இதன் பிறகு, அறிவழகனுக்கு சொந்தமான வைக்கோல் போர் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதுகுறித்து 9.7.23ம் தேதி அறிவழகன் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில், அறிவழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சீனுவாசன், அறிவழகன் மற்றும் எதிர்தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us