/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 14, 2025 11:18 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளுக்கு இடையேயான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். வருவாய், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி உட்பட பல்வேறு துறைகளில் அறிவித்த திட்டங்களில், முடிவுற்ற திட்டங்கள்.
தற்போதைய நிலை, திட்டம் நிலுவைக்கான காரணங்கள் பற்றி, அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைவாக செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் ஆகாஷ், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.