/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை
காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை
காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை
காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை
ADDED : செப் 14, 2025 11:18 PM
செஞ்சி:செஞ்சி அருகே காளான் பண்ணைக்கு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹிமான் மகன் முன்வர் பாஷா 34; இவர் அதே பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக காளான் பண்ணை நடத்தி வருகிறார்.
கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணியளவில், காளான் பண்ணை திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது.
இது குறித்து முன்வர் பாஷா, மர்ம நபர்கள் பண்ணைக்கு தீ வைத்ததாக அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.