ADDED : ஜன 01, 2024 12:23 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் பிரியா, 23; டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.