/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்குபெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2024 11:53 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டு மனைத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி ஜெனிதா, 32; உறவினர் வெங்கடேசன் மகன் பிரவீன், 25; மகள் பிரீத்தி, 24; மூவருக்குமிடையே 3 சென்ட் வீட்டு மனையை பிரிப்பதில் பிரச்னை இருந்து வருகிறது.
ஏற்கனவே பிரவீன், பிரீத்தி ஆகியோர், ஜெனிதாவிடம், தங்களின் இடத்தையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
தற்போது அவர்கள், மேலும் 50 ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில், அவர்கள் இருவரும், ஜெனிதாவை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஜெனிதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் பிரவீன், பிரீத்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.